யாழிற்கு வருகை தரவுள்ள பிக்பாஸ் பெண் பிரபலம்…! ஆவலுடன் காத்திருக்கும் யாழ்ப்பாணிஸ்…!samugammedia

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஜனனி நாளைமறுதினம்(21) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென்னிந்திய தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி பல இலட்சக்கணக்கானோரின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சி காணப்படுகின்றது.

இந்நிலையில் இதுவரை 6சீசன்களை கடந்து வெற்றிகரமாக  நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்வில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட சிலருக்கு சினிமாத் துறையில்  பல்வேறுபட்ட வாய்ப்புக்களும் வந்தவண்ணம் உள்ளது.

அதேவேளை சமூகவலைத்தளங்களிலும் பிக்பாஸ் பிரபலங்கள் ரெண்டிங்கான  நிலையில் வலம் வருவார்கள்.

இவ்வாறானதொரு நிலையில் பல இலட்சக்கணக்காணோரின் மனங்களில் இடம்பிடித்தவர்தான் ஜனனி .

யார் இந்த ஜனனி


முட்டை கண்ணு முழி அழகியான ஜனனி ஐயர் இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள்,உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
 
அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பரீட்சியமனார்.  தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வவ்ப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகரகளை குஷிப்படுத்தி வருகிறார்.

இவ்வாறாக தனது  கியூட்டான கண்ணழகினால் ரசிகர்களை கட்டிப்போட்ட  ஜனனி ஐயர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(21) யாழ்ப்பாணத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தனியார் நிறுவனமொன்றின் திறப்பு விழாவில் கலந்து சிறப்பிப்பதற்காக வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழிற்கு வரும் ஜனனியை காண்பதற்று யாழ் இளைஞர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *