சீனாவை விடவும் இந்தியாவே அதிகம்-நான்கு இலட்சமே இலக்கு என்கிறார் – பிரியந்த பெர்னாண்டோ! samugammedia

மே மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் நான்கு இலட்சம் சுற்றுலாப்பயணிகளின் வருகை என்ற இலக்கை அடையமுடியுமென சுற்றுலா அபிவிருத்திச் சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஏப்பிரல் மாதத்தில் கடந்த 16ஆம் திகதி வரையில் 55 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்திச் சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் ரஸ்யாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும்,

சீனாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்த அளவு வரவில்லை எனவும் சுற்றுலா அபிவிருத்திச் சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மாதத்தில் சீன சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply