உள்ளூராட்சி சபை நிதி முகாமைத்துவ டிப்ளோமோ கற்கை நெறியை பூர்த்தி செய்வதவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!samugammedia

உள்ளூராட்சி சபை நிதி முகாமைத்துவ  டிப்ளோமோ கற்கை நெறியை பூர்த்தி செய்வதவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

இன்று காலை 10 மணியளவில் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபையின் கட்டிடத் தொகுதியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

யுஎன்டிபி நிதி அனுசரணையில் இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவனமும் பொது நிதிக் கணக்காளர் சங்கமும் இணைந்து குறித்த கற்கைநெறியை பயிற்றுவித்தன.

ஆறுமாத காலப்பகுதியை கொண்ட குறித்த கற்கைநெறியை வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சியில் பணியாற்றும்  24 பேர் பூர்த்தி செய்தனர்.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவன பொது பிரிவு தலைவர் வி.கனகசபாபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply