தமிழர்கள் மீது மட்டுமன்றி சிங்களவர்களையும் பாதிக்கும் புதிய சட்டம் – திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்! samugammedia

மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என வழியுறுத்தி திருகோணமலை நகர சபைக்கு முன்னாள் இன்று வியாழக்கிழமை (20) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்குகிழக்கு பெண்கள் கூட்டு எனும் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அமுல்படுத்தாதே,  மனித உரிமைகளுக்கு மதிப்பளியுங்கள், சிறுபான்மையினரை அடக்குவதற்காக புதிய சட்டங்களை உருவாக்காதே ,அச்சமின்றி வாழவிடுங்கள்,இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவிடுங்கள்,மக்களை வதைக்கும் சட்டங்களை உருவாக்காதீர்கள் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply