யாழிற்கு வருகை தந்த பிக்பாஸ் பெண் பிரபலம்…! செல்பி எடுக்க குவிந்த யாழ்ப்பாணிஸ் ரசிகர்கள்…!samugammedia

தென்னிந்திய பிரபல நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஜனனி ஐயர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.

யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள வணிக நிலையமொன்றின் திறப்பு விழா நிகழ்விலேயே அவர் கலந்துகொண்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முட்டை கண்ணு முழி அழகியான ஜனனி ஐயர் இயக்குநர் பாலாவின் அவன் இவன் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள்,உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பரீட்சியமனார்.  தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வவ்ப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகரகளை குஷிப்படுத்தி வருகிறார்.

இவ்வாறாக தனது  கியூட்டான கண்ணழகினால் ரசிகர்களை கட்டிப்போட்ட  ஜனனி ஐயர் இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு முதன்முறையாக வருகை தந்துள்ளார்..

இந்நிலையில் அங்கு வந்த ரசிகர்கள் கூட்டம் மகிழ்ச்சியில் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.


Leave a Reply