ஈழத்து கலைஞர்களின் நடிப்பில் மக்களுக்கான ஒரு திரைப்படமாக வருகிறது 'சபா' திரைப்படம்- இயக்குனர் குமணன்! samugammedia

ஈழத்து கலைஞர்களின் நடிப்பில் மக்களுக்கான ஒரு திரைப்படமாக வருகிறது ‘சபா’ திரைப்படம் என அதன் இயக்குனர் குமணன் தெரிவித்துள்ளார்.

வவுனியா, இரண்டாம் குறுக்குத்தொருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று (21.04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நிறுவனத்தின் ஊடாக தற்போது மூன்றாவது திரைப்படம் தயாராகியுள்ளது. நாளைய தினம் (22.04) மாலை 5.30 மணிக்கு எமது ‘சபா’ திரைப்படம் வவுனியாவில் உள்ள அமுதா திரையரங்கில் வெளியாகிறது.

இத் திரைப்படம் முற்று முழுதாக வவுனியா நகரை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் உள்ள கலைஞர்களில் 40 வீதமானவர்கள் வவுனியாவைச் சேர்ந்தவர்களாவர். ஏனையவர்கள் வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டவர்கள்.

வர்த்தகம் என்பது சரியாக இருந்தால் தான் சினிமா துறையைப் பொறுத்தவரை தொடர்ந்து பயணிக்க முடியும். சரியான வகையில் ஒரு திரைப்படத்தை நாம் மக்களுக்கு கொடுக்கனும் என்னும் போது அதற்கு நிறைய நிதி தேவைப்படும். 42 நிமிடத்தை கொண்ட சபா திரைப்படத்திற்கு நாமே பல கடின வேலைகளை செய்தும் 12 இலட்சம் ரூபாய் வரை  செலவாகியிருக்கிறது.

நிச்சயமாக இந்த திரைப்படமும் சிறப்பாக ஓடும் என்று நம்புகின்றோம். சினிமா மீதான காதலும், ஏக்கமும் சினிமா பார்த்து தான் எமக்கு வந்தது. நாடகத் துறையில் காட்டிய ஆர்வமும் சினிமா நோக்கி நகர்த்தியது. அதற்கான தேடல்களை செய்தேன். அந்த தேடல்களின் விளைவாக நாம் கற்றுக் கொண்ட விடயங்களையும் 5 வருட உழைப்பையும் தான் சபா படத்தின் ஊடாக கொண்டு வந்துள்ளோம். இதனை நீங்கள் சபா திரைப்படத்தில் காண்பீர்கள்.

ஈழத்து கலைகஞர்களின் படைப்புக்களும் இன்னும் 5 வருடங்களுக்கு பின் நல்லதொரு நிலைக்கு வரும். அதற்கு சபா போன்ற திரைப்படங்களுக்கு மக்கள் தரும் ஆதரவே முன்னோடியாக அமையும் எனத் தெரிவித்தார். 

Leave a Reply