கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 4 வருடங்களாகியும் நியாயமான தீர்வை வழங்கப்படவில்லை!samugammedia

தற்போது மீனவ சமுதாயம் பல்வேறு முறையில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந் நிலையில்  சட்டவிரோத  மீன்பிடிக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கும் நிலையும் தொடர்ந்த வண்ணமுள்ளது என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளரும்  கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவருமான நாகமுத்து இன்பநாயகம் தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

21 ம் திகதியிலிருந்து 60 நாட்களுக்கு இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க  தடை காணப்படுவதால்  குறித்த நாட்களுக்கு பிறகு அவர்களின் அத்துமீறல் தொடரும் நிலையுள்ளது.

இது சம்பந்தமான அதிகாரிகளோ அமைச்சரோ தடுத்து நிறுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையி்ல் சட்டவிரோத தொழில்கள் தொடர சாதகமான நிலையுள்ளது.

யுத்தம் முடிந்து 13 வருடங்கள் கடந்தும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாது  நலன்புரி நிலையங்களிலும் வாடகை வீட்டிலும் வசித்து வரும் நிலை காணப்படுகின்றது. இப் பிரச்சினைகள் இன்று வரை தீர்க்கப்படாதுள்ளது.

அரசாங்கமும் சரி அரசோடு ஒட்டி உறவாடும் உறுப்பினர்களும் சரி தமிழ்த் தேசியம் பேசுபவர்களும் சரி இதுதொடர்பில் எந்தவித ஆக்கபூர்வமான செயற்பாட்டை மேற்கொள்ளவதி்ல்லை. அவர்கள் தற்சமயம் தேர்தல் அரசியல் நோக்கியே காணப்படுகின்றமையை அவதானிக்கமுடிகின்றது.

கிறிஸ்தவ தேவாலயங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 4 வருடங்களாகும் நிலையிலும் மாறி மாறி வந்த அரசுகள் நியாயமான தீர்வை வழங்கவில்லை. குறித்த தாக்குதல் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்த முயற்சிக்கவில்லை. அதிகாரத்துக்கு வருவதற்கு துணை புரிந்ததால் தான் குற்றவாளிகள் காப்பற்றப்படுகிறார்களா என மக்கள மத்தியில் கேள்வி எழுகின்றது.

மாபெரும் விடுதலைப் போராட்டத்தை ஒழித்தோம் என உலக நாடுகள் வரை மார்தட்டி கூறும் நிலையில் குறித்த குண்டுவெடிப்பு சூத்திரதாரியை கண்டுபிடிக்கமுடியாத கையாலாகாத நிலையிலுள்ளது. இது இவ்வாறு இருக்கையி்ல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவர இருக்கின்றது. கடந்த 30 ஆண்டுகளாக இருந்த பயங்கரலாதச் சட்டத்தின் வீரியமின்மையால் புதிய சட்டத்தை கொண்டு வருகின்றதா அல்லது எதிர்வரும் காலங்களில் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்காக புதிய சட்டத்தை கெண்டு வருகிறதா என்ற கேள்வி தொடர்கிறது.

ஜே. ஆர். ஜெயவர்த்தனவால் கொண்டு வரப்பட்ட காலப்பகுதியில் தமிழ் மக்களை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டதால் தெற்கில் எவ்வித எதிர்ப்புக்களும் எழவில்லை. மாறாக தற்போது கொண்டுவரவுள்ள சட்டம் அனைத்து மக்களினதும் எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளது.  

நாட்டிலுள்ள வளங்களை வேறு நாடுகளுக்கும் பல்தேசியக் கம்பனிகளுக்கும் விற்கும் நிலை தொடர்கிறது. தமற்கெதிராக மக்கள் போராட்டத்தை மேற்கொள்ளும் போது அதனை புதிய சட்டம் மூலம் கட்டுப்படுத்தி பல்தேசியக் கம்பனிகளின் வள சுரண்டலுக்கு உதவி புரிய இச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

ஆகவே அரசின் செயற்பாட்டுக்கு பின்னணியில் பல்தேசிய கம்பனிகள் இருக்கின்றதா என்ற சந்தேகம் நிலவுகிறது. தமிழர்களின் உரிமை போராட்ட மௌனிப்புக்கு பின்னர் பல்தேசியக் கம்பனிகளின் பங்கு அமைந்திருந்தது என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

அரசு கொண்டுவரும் சட்டமானது சாதாரண குடிமகன் தனது வாழ்வாதாரத்தையோ தொழில் வளங்களை பாதுகாக்க போராடுகின்ற போது பயங்கரவாதி என அடையாளப்படுத்தப்பட்டு தண்டிக்கக்கூடிய நிலை உருவாகவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திற்கு நிதி வழங்கும்  பல்தேசியக் கம்பனிகளுக்கு சார்பாக குறித்த நிறுவனம் விதிகளை விதிக்க சந்தர்ப்பமுள்ளது. தமது அதிகாரங்களை தக்க வைக்க குறிதத புதிய சட்டத்தை நிறைவற்ற வேண்டிய தேவை உள்ளது.

ராஜபக்ச அரசிற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவை தனக்கு வாய்ப்பாகப்  பயன்படுத்தி ஆட்சியை கைப்பற்றிய ரணில் விக்கிமசிங்கவிற்கு எதிர்காலத்தில் இவ்வாறான மக்கள் எதிர்ப்பு போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்கா குறித்த புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

ரணில் குறித்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் நிலையில் இச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் அனைத்து நாட்டு மக்களுக்குமே பாதிப்பு என்றார்.

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடிமைகளான  டக்லஸ் மற்றும் அங்கயன் தவிர ஏனைய அனைத்து தமிழ்த்தேசியம் பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைத்தும் நடுநிலை வகிக்காது எதிர்த்து வாக்களிக்க வேண்டும். – என்றார்.

Leave a Reply