அக்குரணை பிரதேசத்தில் குண்டு தாக்குதல்-பொலிசாரை மிரட்டிய நபர் கைது.!samugammedia

அக்குரணை பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்படுமென 118 அவசர இலக்கத்திற்கு தவறான தகவலை வழங்கிய சந்தேக நபர் ஹரிஸ்பத்துவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி அக்குரண பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக கிடைத்த அநாமதேய தகவலையடுத்து கண்டி பிரதேசத்திலுள்ள இருநூற்று மூன்று பள்ளிவாசல்களுக்கும் மறுஅறிவித்தல் வரை விசேட பாதுகாப்புப் வழங்கப்பட்டிருந்தது.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரும் இணைந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுவதுடன் பள்ளிவாசல்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொய்யான தகவலை வழங்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply