வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் ஏற்பாடு செய்த நோன்பு பெருநாள் தொழுகை!samugammedia

நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை முஸ்லீம்கள் பெருநாள் தொழுகையில்  இன்று சனிக்கிழமை (21.04.2023) ஈடுபட்டனர்.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் ஏற்பாடு செய்த திறந்த வெளியிலாள பெருநாள் தொழுகை இன்று காலை 06.45 மணிக்கு  வாழைச்சேனை அந் நூர் தேசியபாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

பெருநாள் தொழுகையையும் பெருநாள் கொத்பா பேருரையையும் வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் பேஷ்இமாம் அஷ்ஷெய்க் ஏ.எல்.முஸம்மில் நடாத்தினார்.

வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தின் கீழ் இயங்கும் ஏழு பள்ளிவாயல்ளை பிரதிநிதித்துவப்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண்கள் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டதுடன் பெருநாள் தொழுகையில் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

இதன் போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்குவதற்கும் உலக மக்களின் அமைதிக்காகவும் விஷேட துஆ பிராத்தனையும் நிகழ்த்தப்பட்டது.

Leave a Reply