யாழ் நெடுந்தீவு கொலை தொடர்பில் காயமடைந்த பெண் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழ்.நெடுந்தீவில் வீடொன்றில் தங்கியிருந்த 5 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் படுகாயமடைந்த நிலையில் 100 வயதான மூதாட்டி ஒருவர் மீட்க்கப்பட்ட நிலையில் அவர் நலமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட மூதாட்டிக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டுவருகின்றது.

3 பெண்களும், 2 ஆண்களும் உயிரிழப்பு

இந்த நிலையில், அவருடைய உடல்நலம் தேறிவருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இன்று காலை இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் 3 பெண்களும், 2 ஆண்களும் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருந்தனர்.

சம்பவத்தில் உயிர்ழந்தவர்களுள் வெளிநாட்டில் இருந்து தாயகம் வந்த பெண் ஒருவரும் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ் நெடுந்தீவு கொலை தொடர்பில் காயமடைந்த பெண் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply