நெடுந்தீவில் கூட்டுப்படுகொலை…! சந்தேக நபர் கைது…! தொடரும் பரபரப்பு…!samugammedia

நெடுந்தீவு பகுதியில் இன்று அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். மற்றுமொரு வயோதிபப் பெண் படுகாயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தையடுத்து நெடுந்தீவில் பரபரப்பு நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாரின் விசாரணையின் பின்னர்  இன்று மாலை சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அண்மையில் ஜேர்மனியிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply