நெடுந்தீவு கூட்டு கொலையை தடுக்கப் போராடிய நாய்; காயங்களுடன் உயிர் தப்பியது…!samugammedia

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக நேற்று(22)  மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 50 வயதான ஒருவரை கைது செய்தனர்.

அதேவேளை,  குறித்த படுகொலை சம்பவம் இடம்பெற்ற வேளை அந்த வீட்டிலுள்ள நாய் குரைத்து சத்தமிட்டு அதனைத் தடுக்க போராடிய நிலையில் குறித்த  நாயின் மீதும் வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் கழுத்துப் பகுதியில் படுகாயமடைந்த நிலையில்  குறித்த நாய் உயிர் தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply