எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து புதிய தீர்மானம்…!அனைத்து தலைவர்களும் 100 வீத இணக்கம்- கிரியெல்ல!samugammedia

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாச தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை ஆரம்பிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து இன்றையதினம் முன்னெடுத்திருந்த கலந்துரையாடலில் இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இன்று நாம் கலந்துரையாடினோம். சஜித் பிரேமதாச தலைமையில் பாரிய எதிர்கட்சி கூட்டுக்கூட்டணி.எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இன்று கலந்து கொண்டிருந்தன.
சகல கட்சிகளும் நூறு வீதம் ஒத்துக்கொண்டன. எதிர்க்கட்சியில் இருக்குமாறு கூறியுள்ளனர்.

எமக்கு வாக்களித்த மக்கள், தேசிய அரசாங்கத்திற்கு ஆணை வழங்கவில்லை. அதனாலேயே எதிர்க்கட்சியில் இருக்கின்றோம். இந்த கூட்டணி அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை நீடிக்கும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply