தமிழர் தாயகத்தில் இடம்பெறவுள்ள ஹர்தாலுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் இயக்கம் ஆதரவு samugammedia

தமிழ் மக்களால் நாளைய தினம் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்திலே முன்னெடுக்கப்படவிருக்கின்ற பணிப்புறக்கணிப்பு மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்  தன்னுடைய முழுமையான ஆதரவை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

தமிழ்த் தேசிய உணர்வாளர்களாக நாளைய தினம் ஒவ்வொரு தமிழனும் பணிப்புறக்கணிப்பு மற்றும் கதவடைப்புக்கு பூரண ஆதரவை வழங்குவதனூடாக தமிழ்த் தேசமாக எழுச்சியுற்று எமது ஒற்றுமையையும் எழுச்சியையும்  சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லுவோம்.

அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைந்து இப் போராட்டத்திற்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தி நிற்போம்.- என்றுள்ளது.

Leave a Reply