சோளம் இறக்குமதி நிறுத்தப்படுமா? – விவசாயிகளுக்கு விசேட வேலைத்திட்டம்! அமைச்சர் தகவல் samugammedia

சோள உற்பத்தியில் ஈடுபடுகின்ற விவசாயிகளை ஊக்குவிக்குவிப்பதற்கான அனைத்து வேலைத் திட்டங்களையும் வெளிநாட்டு நிதியுதவியினூடாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு விவசாய அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

2023ஆம் ஆண்டில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் சோள உற்பத்தியை எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த ஆண்டு இந்த இலக்கினை எட்டும் பட்சத்தில் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சோள இறக்குமதிக்கும் அவசியமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த ஆண்டுக்கான பருவத்தில் இருபதாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சோளம் பயிரிட தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தள்ளார்

Leave a Reply