தந்தை காலணி வாங்கிக் கொடுக்கவில்லை: மாணவன் விபரீத முடிவு! samugammedia

தந்தை, உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வட்டுக்கோட்டை மேற்கு பகுதியில் வசித்து வந்த, குறித்த மாணவனே நேற்று (24) இரவு  இவ்வாறு தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார்.

குறித்த மாணவனது குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக தந்தையால் உடனடியாக காலணியை வாங்கிக் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையிலேயே மாணவன் விபரீத முடிவை எடுத்துள்ளார்.

 மாணவனது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a Reply