சின்னம்பிள்ளைசேனை, கருமலையூற்று, வெள்ளைமணல், நாச்சிக்குடா, சீனன்குடா, கவாட்டிக்குடா, கப்பல்துரை, முத்துநகர், பாலையூத்து, மட்கோ போன்ற பிரதேசங்களில் மிக நீண்ட காலமாக குடியிருந்து வருகின்ற மக்கள் தற்பொழுது இலங்கை துறைமுக அதிகாரசபையினால் ஏற்பட்டுள்ள காணிப்பிரச்சினைகள் சம்பந்தமாக துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் ருவான்சந்திர மற்றும் துறைமுக அதிகார சபையின் பிரதித் தலைவர் கயான் ஆகியோரை அவர்களுடைய அலுவலகத்தில் இன்று (25) திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பில் குடாக்கரை மக்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினை சம்மந்தமாக விரிவாக ஆராய்ந்ததுடன் இப் பிரச்சினையை விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்போது சீனக்குடா விகாராதிபதி சங்கைக்குறிய அலுத்ஓயா சத்தாதிஸ்ஸ, திமுத்துகம விகாராதிபதி சங்கைக்குறிய சேருவில ஜயதிஸ்ஸ, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பஸீர் மற்றும் குடியிருப்பாளர்கள் கலந்துகொண்டனர்.