இரு உலக சாதனைகளை படைத்த 4வயது தமிழ் சிறுமி…! குவியும் பாராட்டுக்கள்…!samugammedia

கல்முனை வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட துறைவந்தியமேடு கிராமத்தைச் சேர்ந்தவரான ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் 04 வயதுடைய சிறுமி இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவர் தனது இரண்டு கைகளினாலும் A தொடக்கம் Z வரை குறுகிய நேரத்தில் ஆங்கில எழுத்துக்களை எழுதி அவர் ஏற்கனவே படைத்த சாதனையினை தாமே முறியடித்துள்ளார்.

அதாவது  முதலாவது சாதனையாக A தொடக்கம் Z வரையான ஆங்கில எழுத்துக்கள் 3.30 நிமிடங்களில் எழுதப்பட்டது.

இரண்டாவது சாதனையாக A தொடக்கம் Z வரையான ஆங்கில எழுத்துக்கள் 2.38 நிமிடங்களில் எழுதப்பட்டது.

இந்நிலையில் இவற்றை இந்தியா கல்கத்தாவில் இருக்கும் Netaji world record ஆகிய உலக சாதனை புத்தக நிறுவனங்களின் ஊடாக இச் சாதனை பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில்  உலக சாதனை படைத்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் 04 வயதுடைய சிறுமிக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply