எரிபொருள் ஒதுக்கீடு குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவித்தல்..! samugammedia

கடந்த பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டா மறு அறிவித்தல் வரையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்குமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தையொட்டி கடந்த 4 ஆம் திகதி முதல் அரசாங்கம் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஒதுக்கீட்டு அதிகரிப்பை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் இன்று தெரிவித்தார்.

Leave a Reply