யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் மலசலகூடத்தை பார்வையிடச் சென்ற கல்வி அதிகாரிகள்…!samugammedia

யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் மாணவிகள் பாவிக்கும் மலசல கூடம் சீரின்மை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் நேற்றைய தினம்(25) செவ்வாய்க்கிழமை மாகாண கல்வி  அமைச்சின் அதிகாரிகள் திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது பாடசாலையில் உள்ள மலசலகூடத்தை மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் பார்வையிட்ட பின்னர், மலசலகூடமானது 60 சதவீதம் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தனர்.
அத்துடன் 2400 மாணவர்கள் மற்றும் 145 ஆசிரியர்கள் உள்ள குறித்த பாடசாலையில் சிற்றுண்டிச் சாலை இல்லாமையால் அங்குள்ளவர்கள் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர்.
சிற்றுண்டிசாலையை அமைப்பதற்கு சுற்று நிருபம் தடையாக இருப்பதாக அதிபர் தெரிவித்தார்.
இந்நிலையில் மாணவர்களினதும் பாடசாலை சமூகத்தினரதும் நன்மை கருதி உடனடியாக சிற்றுண்டிச் சாலை அமைக்க வேண்டும் என வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அடுத்தவாரம் சிற்றுண்டிச் சாலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply