தெல்லிப்பழையில் வறுமைக் கோட்டின் கீழுள்ள 500 குடும்பங்களுக்கு இலவச அரிசி வழக்கும் நிகழ்வு!

தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழுள்ள 500 குடும்பங்களுக்கு, இரண்டாம் கட்டமாக இலவச அரிசி வழக்கும்  நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வானது தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில், பிரதேச செயலரின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு இவ்வாறு அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், தெல்லிப்பழையில் மொத்தமாக பத்தாயிரம் குடும்பங்களுக்கு இவ்வாறு அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்த இந்நிகழ்வில், யாழ். அரசாங்க அதிபர் சிவபாதசுந்தரன், மகளிர், சிறுவர் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், ஜனாதிபதி அலுவலகப் பிரதானியும் பாதுகாப்பு விவகாரங்களுக்குமான ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, இராணுவத் தளபதி எச்.எல்.ஆர்.எம். லியனகே, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேயர் ஜெனரல் போத்தொட்ட, வட பிராந்திய கடற்படை கட்டளை தளபதி தென்னக்கோன், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் குணரத்ன, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனவிரத்ன, பதவி நிலை அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Reply