முத்தையா முரளிதரனை தொடர்ந்து உலக சாதனை படைத்த பிரபாத் ஜயசூரிய!samugammedia

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான  பிரபாத் ஜயசூரிய உலக சாதனை படைத்துள்ளார்.

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 50 விக்கட்டுகளை எட்டிய வீரர் என்ற சாதனையை ஜயசூரிய தட்டி சென்றுள்ளார்.

7 டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்றுள்ள பிரபாத் ஜயசூரிய 11 இன்னிங்ஸ்களில் ஐம்பது விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் குறைந்த எண்ணிக்கையிலான இன்னிங்ஸ்களில் 50 விக்கட்டுகளை வீழ்த்திய உலக சாதனையயும் பிரபாத் ஜயசூரிய சமன் செய்துள்ளார்.

அத்துடன், பிரபாத் ஜயசூரிய 2 ஆவது இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், முதல் இரண்டு டெஸ்டில் 4 ஐந்து விக்கெட்டுகளை எடுத்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

முத்தையா முரளிதரன் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோருக்குப் பின்னர் தொடர்ச்சியாக மூன்று ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இலங்கை சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையினையும் இவர் பெறுகின்றார்.

Leave a Reply