மக்களுடைய உரிமைகள் மற்றும் நலன்கள் சார்ந்து ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிடும் போது அது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றதாக குறிப்பிட்டு கைது செய்து 3 மாதங்களுக்கு தடுத்து வைக்கக்கூடிய அதிகாரம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளர் மு.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
எனவே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைத்து ஊடகவியலாளர்களும் இணைந்து தோற்கடிப்பதற்கான முனைப்புகளில் ஈடுபடவேண்டும் என்றும் மு.தமிழ்ச்செல்வன் அழைப்பு விடுத்துள்ளார்.
கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து
கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.