புறாக்களை எரிக்கும் டிக்டாக் வீடியோ…!இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி – அளுத்கமவில் சம்பவம்.! samugammedia

சுதந்திரமாக வளர்க்கப்பட்ட புறாக்களை திருடி, அதனை கொன்று எரிக்கின்ற காணொளியை, டிக்டாக் வீடியோவாக வெளியிட்ட இளைஞர்கள் குழுவை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞர்கள் இந்த காணொளியை, புறாக்களின் உரிமையாளரின் தொலைபேசிக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் அளுத்கம தர்காவில் இருந்து பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

அளுத்கம பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 26ஆம் திகதி அளுத்கம தர்கா நகரம், இஸ்தபுள்ள வீதி பகுதியில் புறாக்கள் இருந்த கூண்டை உடைத்து இந்தச் செயலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 18 மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் நாளை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply