2023 மேதினத்திலாவது வடக்கு கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்: அன்னராசா கோரிக்கை!samugammedia

2023 மே தினத்திலாவது வடக்கு கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அண்ணலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (30)  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு கடற்பரப்பில், நீண்ட காலமாக சட்டவிரோதமான கடற்றொழில் முறைகள் மற்றும் கடலட்டை பண்ணை என்பவற்றால் அதிகளவில் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

எனவே, இந்த தொழிலாளர் தினத்திலாவது கடற்றொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என அன்னராசா தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  கடல் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து கடற்றொழிலாளரின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொள்வது தொடர்பாக கோரிக்கை விடுத்தபோதிலும் இதுவரை ஜனாதிபதியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply