ரின் மீன்களால் ஆபத்து: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…!samugammedia

2021ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் மனித பாவனைக்குத் தகுதியற்ற ரின் மீன் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு ஒன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளரும், தற்போது தகவல் வெளியிடுபவராகவும் செயற்பட்டு வரும் துஷான் குணவர்தன இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

துறைமுக அதிகாரசபையால் தடைசெய்யப்பட்ட ரின் மீன்களை விற்குமாறு 2021 ஜூலையில் அரசுக்கு சொந்தமான சதொச விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை குணவர்தன வெளியிட்டுள்ளார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையினால் தடைசெய்யப்பட்ட டின் மீன்களை லங்கா சதொச விற்பனை நிலைய வலையமைப்பின் ஊடாக விற்பனை செய்ய அமைச்சரவை தீர்மானித்ததாக அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் குறித்த விற்பனையை நிறுத்த நுகர்வோர் அதிகார சபை தலையிட்டது. எனினும், வர்த்தக அமைச்சகம் குறித்த விற்பனையை தொடர விரும்பியதாக துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply