யாழில் மே தின ஊர்வலம்

வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினத்தில் வாகன ஊர்வலமொன்று யாழ்.நகரில் நடைபெற்றது.

இதன்போது மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் சிவப்பு கொடியை கட்டியவாறு ஊர்வலம் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து இன்றைய தினம்(திங்கட்கிழமை) காலை 08.30 மணியளவில் மோட்டார் வாகன ஊர்வலம் ஆரம்பித்து யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் நிறைவுபெற்றது.

Leave a Reply