ஒரு நாட்டின் உள்ளூர் உற்பத்தியின் வளர்ச்சியே நாட்டின் நிரந்தர பொருளாதார வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக அமையும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார் .
பிரதமர் நரேந்திர மோடியின் மாதாந்த வானொலி நிகழ்ச்சியான ‘மன் கி பாத்’ (உள்ளத்தில் உள்ளதை பேசுதல்) நிகழ்ச்சியின் 100வது நாள் நிறைவு நிகழ்வான நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கலந்து கொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நேரடி நிகழ்ச்சி கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியவையும் மான் கி பாத்தின் நேரடி நிகழ்வை ஒளிபரப்பின.
மான் கி பாத் நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிக்கையில் ஏற்றுமதி இலக்குகளை அடைய ஒரே சூத்திரம் “வோக்கல் ஃபார் லோக்கல், லோக்கல் ஃபார் க்ளோபல் எனத் தெரிவித்தார்.
மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கும் இதே மந்திரம்தான் பொருந்தும் என மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கையிலிருந்து ஏற்றுமதிகள் 2% குறைந்து 1,037 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது,
உலகம் முழுவதும் ஒளிபரப்பான மன் கி பாத்தின் 100வது எபிசோடில், மக்கள் பங்கேற்பு மற்றும் நேர்மறையை கொண்டாடும் வகையில் வானொலி ஒலிபரப்பின் பயணத்தை இந்திய பிரதமர் நினைவு கூர்ந்தார்.
சமூக மாற்றங்களை இலக்காகக் கொண்ட வெகுஜன இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் இந்த திட்டம் ஏற்படுத்திய மாற்றத்தக்க தாக்கத்தை இந்தியன் பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
மைல்ஸ்டோன் எபிசோட், பெண்கள் அதிகாரமளித்தல், உள்ளூர் கைவினைப் பொருட்களை மேம்படுத்துதல் மற்றும் இயற்கையைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் கருப்பொருளில் சில பிரபலமான கதைகளை மறுபரிசீலனை செய்தது.
சர்வதேச நிகழ்ச்சி நிரலில் கலாச்சாரம் மற்றும் கல்வியை முதன்மையாக வைக்க இந்தியா முயற்சிக்கும் வழிகள் குறித்து யுனெஸ்கோ (UNESCO) டிஜி மற்றும் இந்தியன் பிரதமருக்கு இடையேயான இணையவழி கலந்துரையாடலும் இதில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.