மறைந்த முன்னாள் ஜனாதிபதி R.பிரேமதாசவின் 30ஆவது நினைவு தினம் இன்று(01) காலை கொழும்பு புதுக்கடை ரணசிங்க பிரேமதாசவின் நினைவுத்தூபிக்கருகில் நடைபெற்றது.
ரணசிங்க பிரேமதாச நாட்டின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கடமையாற்றிய போது 1993 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் கொலை செய்யப்பட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தலைமையில் இன்று அன்னாரின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அனைத்து மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.