தந்தை செல்வாவின் எண்ணங்களோடு தோன்றிய தேசிய இன எண்ணங்கள் காணாமல் போகின்றது-கே.ரி கணேசலிங்கம் ஆதங்கம்…!

இன்றளவும் ஒரு  சமூகம்  1000 ரூபா சம்பளத்திற்காக போராடிக்கொண்டிருக்கின்றது. ஆனால் நாம் அதை வைத்து அரசியல் செய்து பிழைக்கின்றோம் என யாழ் பல்கலை அரசறிவியல்துறைப் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்தார்.

யாழில் இடம்பெற்ற தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தொழிலாளர் தின பொதுக்கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாரதியார் சிங்களத் தீவிற்கு பாலம் அமைப்போம் என்ற கூற்றே ஆகிவிட்டது ஆகப்போகின்றது. சீனா மாத்தறையில் ராடர் பொருத்துகிறது. இந்தியா மீள மீள 13 ஐ எப்படியாவது நடைமுறைப்படுத்திவிடுங்கள் என்கிறது அமெரிக்கா சோபாவை அமுல்படுத்தவில்லை என்கிறது.

பிரதேசமாக மோதி சாதியமாக மோதி தற்போது மதமாக மோதுகிறோம். நாம் சாதியம் மதமாக போராடினாலும் நம்முன்னேயுள்ள அரசியல் வறுமையானது. அது தற்போது தன்னுடைய இயலாமையின் எல்லைக்குள் இருக்கின்றது.

அந்த சூழலுக்குள்ளே தான் இனத்தினுடைய கட்டமைப்பு தேடப்பட வேண்டும். இத் தொழிளாளர் தினத்தின் உண்மையான நோக்கத்தை அடைய ஈழத்தமிழினம் முன்நிற்க வேண்டும்.13 ஐ மீள உச்சரிக்க ஒரு கூட்டமே உள்ளது. ஐ.நா சபை வரை கூறிவிட்டார்கள். ராஜீவ் காந்தி இட்ட பிச்சை இந்திய இலங்கை உறவாடலாக 13 ம் திருத்தச்சட்டமுள்ளது.

ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு தரப்பு தீர்வு தருவார்கள் என நம்பியிருந்தனர்.எவரும் ஈழத் தமிழர்களை கட்டமைக்க வேண்டும் என்று ஒரு போதும் எண்ணவில்லை.எல்லா மனிதனுக்கும் மதங்கள் உள்ளது. அதற்கு உரித்துடையவர்கள் அதை தான் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் உள்ளது. அதனை ஏற்றுக் கொள்வது என்பது கட்டமைக்கப்பட வேண்டிய விடயம்.போலித் தேசியம் பற்றிய எண்ணத்தை விட்டுவிட்டு செயற்பட வேண்டும். இவற்றைக் கடந்து பொருளாதார ரீதியாகத் தேசியம் கட்டமைக்கப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்கள் தங்களுடைய இருப்புக்களில் மாற்றங்களை செய்ய வேண்டும். தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டால் சிங்களத்தீவுக்கு பாலம் அமைக்கும் நிலை ஏற்படும்.

ஈழத்தமிழர்களின் நகரக் கட்டமைப்பு பிரித்தானியரின் க்டமைப்பிலிருந்தே ஆரம்பமாகிறது. புதிய வாழ்வியல் முறைகளை இதுவரை ஆக்கியதாக தெரியவில்லை. ஒரு சில காணப்பட்டாலும் அவற்றின் இருப்புக்கள் பல பழைய அம்சங்களுடன் காணப்படுகின்றன.

இலங்கை உலக வல்லரசுகளின் தளமாகக் காணப்படுகி்ன்றது. இலங்கையில் மிக பெரிய போராட்டம் இந்த மண்ணில் எந்த வல்லரசு தங்கள் இருப்பை நிலைநாட்டிக் கொள்வதேயாகும். அந்த தளத்தில் தான் மோதலும் போட்டியும் வளர்ந்து கொள்கின்றது.பொருளாதார நெருக்கடித் தளத்தில் தான் ஈழத் தமிழினம் அரசை சம தூரத்தில் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த சமூகம் தற்போது கையறு நிலையிலுள்ளது. அந்த விம்பத்தை உருவாக்கியதும் மக்களே. இவர்கள் இது சார்ந்த தெளிவை உருவாக்கினால் ஒரு கட்டமைப்பினூடாக பயணிக்க வேண்டும்.
நாம் எவ்வாறு தேசங்களோடும் நாடுகளோடும் எவ்லாறு உறவுகளை வைத்துக்கொள்வதில் அவதானம் வேண்டும்.இங்கு  இருப்பது சைவமாக இருப்பினும் இந்துத் தேசியம் பற்றி பிரஸ்தாபிக்கின்றோம். இது தமிழ்த் தேசியத்தை இல்லாமலாக்கச் செய்யும் இலக்காக அமையும்.

தந்தை செல்வாவின் எண்ணங்களோடு  தோன்றிய தேசிய இன எண்ணங்கள் காணாமல் போகின்றது. மிதவாத அரசியலுக்குள் பழக்கப்பட்ட சக்திகள் அதை நோக்கி மக்களை அலையாகத் திரட்டியள்ளனர். அதேவேளை ஆயுதப் போராட்டத்த தலைமைக் கட்டமைப்பு காணாமல் போன போது சமூகத்தின் கட்டமைப்புக்கள்  பலவும் சீர்குலைந்தன.

எனவே எதிர்காலத்தில் அரசியலுக்கப்பால் குறித்த கட்டமைப்பை பற்றி போலிகளுக்குள் பயணம் செய்வதை விடுத்து யதார்த்தங்களுடன் பயணிக்க வேண்டும் என்றார்

Leave a Reply