பயிற்ச்சிக்காக வெளிநாடு சென்ற 400 வைத்தியர்கள் மாயம்!

பயிற்சிக்காக வௌிநாடு சென்ற சுமார் 400 வைத்தியர்கள் இதுவரை நாடு திரும்பவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இவ்வருடத்தில் பயிற்சிக்காக வௌிநாடு சென்ற 67 விசேட வைத்திய நிபுணர்கள், மீளவும் நாட்டுக்கு வருகை தரவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேசமயம் சுகாதார அமைச்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில் குறித்த வைத்திய நிபுணர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.   

The post பயிற்ச்சிக்காக வெளிநாடு சென்ற 400 வைத்தியர்கள் மாயம்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply