ஊடகவியலாளர்களை கண்டதும் பின் கதவால் வெளியேறிய இராஜாங்க அமைச்சர்! samugammedia

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களைக் கண்டதும் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இருந்து பின் கதவால் கிராமிய இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்  அவர்கள் வெளியேறிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் கூட்டம் முடிந்து வந்த வடக்கு ஆளுனர், மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோரிடம் தம்மை கூட்ட மண்டபத்திற்கு அனுமதிக்காமை தொடர்பில் கேள்வி எழுப்பினர்.

இதனை அவதானித்த கிராமிய இராஜாங்க அமைச்சரின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் தம்மை ஏன் உள்ளே அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் என்ற விடயத்தை இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, கூட்ட மண்டபத்தின் பின் வாசல் பகுதிக்கு தனது வாகனத்தை வரவழைத்து அங்கிருந்து ஊடகவியலாளர்களை சந்திக்காது இராஜாங்க அமைச்சர் தனது சகாக்களுடன் வெளியேறியிருந்தார். 

Leave a Reply