மனவளர்ச்சி குன்றிய 21 வயதுடைய யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குடும்பத் தலைவரான முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொல்பகொட பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
யுவதி கொய்யாப்பழம் பறிக்கச் சென்றிருந்த நிலையில், சந்தேக நபர் தனது காணியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதன்போது சந்தேக நபர் யுவதியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தார், பின்னர் யுவதி வீட்டிற்கு அருகில் வசிக்கும் உறவினரிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
சிறுமியின் தாயிடம் நடந்த சம்பவத்தை உறவினர் கூறியதையடுத்து, அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்தார்.
சந்தேக நபரை யக்கலமுல்ல காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் சி.பி.ஹேவகே சார்ஜன்ட் விஜிதாநந்த (58888) கைது செய்ததுடன் சந்தேக நபர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.