சந்திரகிரகண நாளான இன்று கர்ப்பிணி பெண்கள் மறந்தும் கூட செய்ய கூடாதவை

  இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் சித்ரா பவுர்ணமி, புத்த பூர்ணிமா வரக்கூடிய இன்று (மே 5 ) இரவு ஏற்பட உள்ளது.

2023 -முதல் சந்திர கிரகணம்

இந்திய நேரப்படி மே 5ம் தேதி இரவு 8.44 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது. கிரகணத்தின் உச்சமாக இரவு 10.52 மணிக்கு இருக்கும். நள்ளிரவு 1.01 மணிக்கு சந்திர  கிரகணம் நிறைவடைய உள்ளது.

கிரகணங்கள் கர்ப்பவதிகளுக்கு ஒன்றும் அசுபமான விஷயம் அல்ல. ஆனால் சில விஷயங்கள் எதிர்மறையான சக்திகளின் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும்.

அதனால் அவர்கள் சில விஷயத்தில் கவனமாக இருந்தாலே போதும். சந்திர கிரகணத்தைப் பார்க்க கூடாது, இந்த சந்திர கிரகண நேரத்தில் சந்திரனை நிழல் கிரகம், சர்ப்ப கிரகமான கேது விழுங்குவதாக புராண கதை கூறுகிறது.

இதனால் ஒளிபொருந்திய சந்திரனின் தன்மை அசுத்தமாகிறது. ஒளி மங்குகிறது. இது சந்திர கிரகணம் என்பதால், நாம் வெறும் கண்களால் பார்க்கலாம். ஆனால் கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது நல்லது.

கர்ப்பிணிகள் செய்யக்கூடாதவை

மனோ காரகன் என அழைக்கப்படுபவர் சந்திரன். இவர் மன சங்கடம், மன கலங்கத்தை தருவார் என்பதால் சந்திரகிரகண நேரத்தில், கர்ப்பிணிகள் கத்திரி, கத்தி, ஊசி போன்ற கூர்மையான பொருட்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.

கிரகணத்தின் அசுத்தக் கதிர்களால் உணவு மாசுபடுவதாக நம்பப்படுகிறது, எனவே கர்ப்பிணிப் பெண்கள் கிரகணத்தின் போது சமைப்பதும், சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கிரகணத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் உணவு உண்டு விடுவது நல்லது. சமைத்த உணவுகள் இருப்பின் அவற்றின் மேல் துளசி, தர்ப்பை புல் போட்டு வைப்பது நல்லது.

என்ன செய்ய வேண்டும் ?

சந்திர கிரகணமோ, சூரிய கிரகணமோ எதுவாக இருந்தாலும் அந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயம் இறைவழிபாடு. கிரகண நேரத்தில் கோவில்கள் பூட்டப்பட்டாலும், நாம் வீட்டிலேயே இறைவனை நினைத்து மந்திரங்களை உச்சரிக்கலாம்.

கிரணம் முடிந்ததும் வீட்டை சுத்தம் செய்து பூஜை செய்யலாம். சந்திர கிரகணம் இரவில் நடக்கும் என்பதால் மறுநாள் விடிந்ததும், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் மற்ற குடும்பத்தார் குளித்து சுத்தமாக வேண்டும்.

நீங்கள் குளிக்கும் நீரில் சிறிது மஞ்சள், கல் உப்பு, போட்டு குளிப்பது நல்லது.

கர்ப்பிணிப் பெண்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கிரகண நேரத்தில் ஆன்மிக புத்தகங்களைப் படித்தல், ஸ்ரீ ராம ஜெயம், ஓம் நமசிவாயா என எளிய இறை நாமங்களை உச்சரிப்பது அவசியம்.

The post சந்திரகிரகண நாளான இன்று கர்ப்பிணி பெண்கள் மறந்தும் கூட செய்ய கூடாதவை appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply