இலங்கையில் கல்வி மறுசீரமைப்பு மிகவும் அவசியம் என்றும் எனவே அதற்கு பொதுநலவாய அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் ஆகியோர் பொதுநலவாய நாடுகள் அமைப்பின், தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.
இளையோரின் பங்கேற்பு மற்றும் கல்வி மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு பொதுநலவாய அமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இதேவேளை கானா நாட்டின் ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, இந்த நிகழ்வுக்கு இணையாக நடைபெற்ற ‘Fireside Chat’ நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தார்.