என் வாழ்க்கையை நாசமாக்கியது கஞ்சா பாவனையே..! – யுவதியை கொலை செய்த இளைஞனின் அதிர்ச்சி வாக்குமூலம்! samugammedia

இலங்கையில் தற்போது அதிகரித்து வருகின்ற கஞ்சா மற்றும் ஜஸ் போதைபொருள்களின் பாவனை காரணமாக அதிகளவான வன்முறைச்சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில் கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 07 ஆம் திகதி பாத்திமா முனவ்ரா என்ற யுவதியை கொலை செய்த இளைஞன் அதிர்ச்சி தருகின்ற பல விடயங்களை வாக்குமூலத்தில் தெரிவித்திருந்த நிலையில் அந்த ஓடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

கஞ்சா பாவனை காரணமாகவே பெண்ணை கொலை செய்ததாகவும் தன்னுடைய வாழ்கை இன்று சீரழிந்து போவிட்டதாகவும் குறித்த இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

அன்றையதினம் கஞ்சாவை பாவித்த பின்னர் ஆட்டிற்கு குழை வெட்டியதாகவும் பாத்திமா முனவ்ரா என்ற யுவதியிடம் பணம் கேட்பதற்கே இடைமறித்தாகவும் ஆனால் யுவதி கூக்குரல் இட்டதால் அவரின் கழுத்தை நெரித்தாகவும் இளைஞன் வாக்கு மூலத்தில் குறிப்பிடுகின்றார்.

கஞ்சா பாவித்திருந்தபோது தனக்கு எதுவும் தெரியவில்லை என்றும் தற்போது போதை தெளிந்ததும் தனது தவறை உணர்ந்து கொள்வதாகவும் இளைஞன் குறிப்பிடுகின்றார்.

தமது பிரதேசத்தில் 98 சதவீதமான இளைஞர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் எனவே கஞ்சா விற்பனை செய்கின்ற அனைவரையும் மக்கள் அடையாளம் காண்டு அவர்களை கைது செய்யவேண்டும் என்றும் இளைஞன் குறிப்பிடுகின்றார்.

பலப்பிட்டி என்ற பிரதேசம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்வர்களே அதிகமாகவுள்ளதாக கொலை செய்த இளைஞன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்

Leave a Reply