நாட்டின் பாதுகாவலர் தாங்கள் தான் என காண்பித்து ஆட்சி பீடம் ஏறவே சிறுவர் கடத்தல் நாடகம் – தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை குற்றச்சாட்டு! samugammedia

நாட்டில் பாதுகாப்பில்லை என காண்பித்து பாதுகாவலர் தாங்கள்தான் என காண்பித்து ஆட்சிபூடம் ஏறவே சிறுவர் கடத்தல் நாடகம் என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. கிளிநொச்சி விவேகாநந்தா நகரில் அமைந்துள்ள அவ்வமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது,

அண்மைக்காலமாக சிறுவர் கடத்தல் தொடர்பாக நாட்டில் உள்ள மக்கள் அச்சத்தை எதிர்கொண்டிருக்கின்றார்கள். மே மாதம் என்பது எமது மக்களால் போற்றப்படவேண்டியதாக உள்ளது. அந்த மேதாதத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளிற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இவ்வாறான கடத்தல் சம்பவங்களை அரசாங்கம் மேற்கொள்கின்றது. 

கடந்த காலத்தில் ராஜபக்ச அரசாங்கம் தாங்கள் வருவதற்காக கிறிஸ் புதம் போன்ற பிரச்சினையை தோற்றுவித்தது. அதனை தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதலில் அநேகமான மக்களை கொன்று குவித்தனர். ஏனெனில் தாங்கள்தான் இந்த நாட்டின் காவலர்கள் என்ற பெருமிதம் இந்த ராஜபக்ச குடும்பத்திற்கு இருக்கின்றது,

தாங்கள் வந்தால்தான் இந்த நாட்டை பாதுகாக்க முடியும் என்ற தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் முதலில் ஆட்சியை கைப்பற்றினார்கள். மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பின்னரும் தாங்கள் மீண்டும் ஆட்சியை ரகைப்பற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறான பிரச்சினைகளை உருவாக்கி நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக காண்பிப்பதற்காக முயற்சிக்கின்றனர் என கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வடிவேல் நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

இன்றைய காலப்பகுதியில் கிறிஸ் பூதம் அதேபோல பல்வேறு சம்பவங்களின் பின்னணியில் பல செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக சிறுவர்களை இலக்குவைத்து அவர்கள் கடத்தப்படுகின்றார்கள் என்ற தோரணை இந்த சமூகத்தில் கட்டியெழுப்பப்படுகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மட்டக்களப்பு என இலங்கையின் அனைத்து பகுதியிலும் இது தொடர்பான செய்திகள் பதிவாவதை காணக்கூடியதாக இருக்கின்றது. திட்டமிடப்பட்ட அரசியல் பின்னணியாகதான் நாங்கள் இதனை கருதுகின்றோம்.

இந்த நாட்டில் பாதுகாப்பான சூழ்நிலை என்ற தோரணையை கட்டியெழுப்புவதற்காக ராஜபக்ச முகவர்களினால் திட்டமிட்டு பரப்பப்படுகின்ற செய்தியாகதான் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. இதேபோல கடந்தகாலங்களிலும் சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றது. 

ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக இவ்வாறான பல சம்பவங்களை நாட்டில் அரங்கேற்றியிருக்கின்றார்கள். குறிப்பாப 1012ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியிலே பல தேர்தல்களை எதிர்கொள்ளவேண்டிய சூழல்கள் உருவாகின்றபொழுது இராணுவத்தினரின் பின்னணியைக்கொண்டு கிறிஸ் பூதம் என்ற செயற்பாட்டினை கொண்டு வந்தார்கள்.

அச்சந்தர்ப்பத்தில் பல பெண்களை இலக்குவைத்து பல துஸ்பிரயோகமான சம்பவங்களை நிகழ்த்தியிருந்தார்கள். அதன் பின்னணியில் நாட்டில் பயங்கரவாதம் தொடர்ச்சியாக இருக்கின்றது என்ற விடயத்தை காட்டி அதன் மூலமாக ஆட்சிக்கு வந்தார்கள். 

அதற்கு பிற்பாடு ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் ஊடாக இந்த நாட்டிலே பாதுகாப்பு குறைபாடு இருக்கின்றது என்ற தோரணையை காட்டுவதற்காக அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்து அந்த ஈஸ்டர் குண்டு தாக்குதலை மேற்கொண்டிருந்தார்கள்.

அதன் மூலமாக பல அப்பாவி உயிர்கள் காவு கொள்ளப்பட்டு அதனுடைய பெறுபேறாக கோட்டபாஜ ராஜபக்ச வரக்கூடியதான ஏது நிலையை அவர்கள் உருவாக்கினார்கள். அதேபோல இன்றைய காலகட்டத்தில் துரத்தியடிக்கப்பட்ட ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற வெறிகொண்டவர்களாக இன்றைய காலப்பகுதியில் அவர்கள் சிறுவர்களை இலக்கு வைத்து மிலேச்சைத்தனமான செயற்பாட்டை ஆங்காங்கே நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

இது வன்மையாக கண்டிக்கவேண்டியது. நாங்கள் இளைஞர்களாகவும், இளைஞர் சமுதாயமாகவும், நல்லொழுக்கமுள்ள இளைஞர் சபையாகவும் நாங்கள் இந்த விடயத்தை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையாக வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த அரசியல் உண்மையை மக்கள் அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் பி. குமாரசிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 18ம் திகதி காலை முள்ளிவாய்க்காலில் நினவேந்தல் நிகழ்வு இடம்பெற்றதை தொடர்ந்து, கிளிநொச்சி பசுமைப் பூங்காவில் அஞ்சலி நிகழ்வு மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அதில் அரசியல் பேதமின்றி உணர்வுபூர்வமாக கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply