ஜெரோம் பெர்னாண்டோ அனைத்துலக சதியின் ஏவலர்..! அவரை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு கோரிக்கை! samugammedia

ஜெரோம் பெர்னாண்டோவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரது பயங்கரவாதச் செயல்களுக்காக நீதித்துறையின் முன் நிறுத்துமாறு சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கையில்,

இலங்கை இந்துக்களான நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம். இந்து மத உணர்வுகள் கேலிக்கூத்தாகின. இந்து வழிபாட்டு முறையைக் கண்டித்தனர். இந்து மத நம்பிக்கைகளை வெட்கத்துக்குள்ளாகின. 

இந்துக்களாகிய நாம் எமது வரலாற்றுத் தாயகமான இலங்கையில் பல்லாயிரம் வருடங்களாக மண்ணின் மைந்தர்களாக வாழ்ந்து வருகிறோம்.

எங்கள் நம்பிக்யை நெறியை வாழ்வு முறையை அவமானப்படுத்தி, நம்மைக் கண்டித்து,  ஏளனம் செய்து மகிழ்பவர் கடந்த 500 ஆண்டுகளாக ஆபிரகாமியத் மதத்தவர். ஒரு போதகர், தன்னைத்தானே நபி எனப் பிரகடனப்படுத்தியவர்,  மதமாற்றியான  சுவிசேசகர் திரு. ஜெரோம் பெர்னாண்டோ, சில நாள்களுக்கு முன்பு, இந்துக்களை, இந்துக்களின் வழிபாட்டு முறைகளை,  இந்துக்களின் வரலாற்று பாரம்பரிய நம்பிக்கைகளைக் கேலி செய்துள்ளார், ஏளனத்தில் ஈடுபடத் துணிந்தார். இலங்கை இந்துக்களான நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம்.

ஜெரோம் பெர்னாண்டோ தனி ஆளல்ல. அனைத்துலகச் சதியின் ஏவலர். அவர் வழி வெளிநாட்டுப் பணம் இலங்கைக்குள் வருகிறது. 

வெளிநாட்டினர் இலங்கைக்கு வருகிறார்கள். அப்பாவிகளான பூர்வீக இந்துக்களின் நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களின் அனைத்து அம்சங்களையும் கண்டித்து அவர்களை அந்நிய மதமான கிறிஸ்தவத்திற்கு மாற்றுவதைக் கண்டிப்பதே இவர்களின் நோக்கம்.

இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் சீரழிவதிலிருந்து பாதுகாக்குமாறு இந்துக்களாகிய நாங்கள் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம். ஜெரோம் பெர்னாண்டோவின் அறிவிப்புகள் வெறுப்பு, நல்லிணக்கமின்மை மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளன.

ஜெரோம் பெர்னாண்டோவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து, அவரது பயங்கரவாதச் செயல்களுக்காக நீதித்துறையின் முன் நிறுத்துமாறு இந்துக்களாகிய நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.- என்றுள்ளது.

Leave a Reply