ஐந்து வயதுச் சிறுமியின் காதை பதம் பார்த்த ஆசிரியர்…! அம்பாறையில் சம்பவம்..!samugammedia

ஐந்து வயது சிறுமியியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அம்பாறை – பானம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 54 வயதான ஆசிரியர் ஒருவரே கைது  செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையில் பயிலும் ஐந்து வயது சிறுமியின் காதில் குறித்த ஆசிரியர் கொடூரமாக தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பானம பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 54 வயதுடைய ஆசிரியர் தாக்குதலுக்கு உள்ளான சிறுமியின் வகுப்பு ஆசிரியை என்றும்  பொலிஸார் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து,  ஆசிரியரின் கொடூர தாக்குதலிற்கு உள்ளான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்

Leave a Reply