இன்று அல்லது நாளை புதிய தலைவர் நியமனம்.?? – நாடு திரும்பிய ரணில்..! samugammedia

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து இன்று நாடு திரும்பியுள்ள நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு புதிய ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளையதினம் இந்த நியமனம் வழங்கப்படுமென கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு விரைவில் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் புதிய ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்கவை நீக்குவது தொடர்பான கடிதத்தை நிதியமைச்சின் செயலாளர் ஜனக ரத்நாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply