காதலியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இராணுவ வீரருக்கு ஏற்பட்ட கதி..! samugammedia

யுவதி ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என அச்சுறுத்திய இராணுவ சிப்பாய் ஒருவரை வாரியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவருடன் இந்த இராணுவச் சிப்பாய் காதல் உறவில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவருடன் உடலுறவு கொள்ளும் தருணங்களை பதிவு செய்ய இந்த ராணுவ வீரர் முயன்றுள்ளார்.

இதனால் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக யுவதி அவருடன் இருந்த உறவை முறித்துக் கொண்டுள்ளார்.

அதன் பின்னர் குறித்த யுவதியை  இராணுவ சிப்பாய் அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply