பொலிஸ் நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு கஜேந்திரகுமாருக்கு உத்தரவு..! samugammedia

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் என தெரிவித்துள்ளேன் என  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரை தொடர்பு கொள்ள முயன்றேன். தொடர்புகொள்ள முடியவில்லை. பிரதி சபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளேன்.- என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply