ஊழலுக்கு எதிரான புதிய சட்டமூலம் மீதான விவாதம் – வெளியான தகவல்.! samugammedia

எதிர்வரும் 21ஆம் திகதி ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான விவாதம்  நடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரக் குழுவில் தீர்மானிக்கப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்தச் சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தாகவும் அதில் உள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அதன்படி, உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியபடி அந்த சரத்துகள் திருத்தப்பட வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தினார்.

அத்துடன், இன்று கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் எதிர்வரும் 20ஆம் திகதி குறித்த சட்டமூலம் மீது விவாதம் நடத்தவும் நாடாளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அலுவலகம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply