முதலில் மாகாண சபைத் தேர்தல்..! பசில் அறிவிப்பு..!இந்தியாவின் அழுத்தமா..??samugammedia

இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபைத் தேர்தலை முதலில் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர் மன்ற கூட்டத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் உள்ளுராட்சி மன்றை தேர்தலை முதலில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்ற அதேவேளை போராட்டங்களையும் முன்னெடுக்கின்றனர்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான முன்னெடுப்பதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

மேலும், சரத் வீரசேகர போன்ற சில இனவாத எம்.பிக்கள் இந்தியாவின் அழுத்ததிற்கு ரணில் அடிபணிய மாட்டார் என்றும் பொதுஜன பெரமுனவின் தீர்மானத்திற்கு மாறாக ரணில் செயற்படமாட்டார் என்றும் நம்பிக்கை வெளியிடுகின்றனர்.

இந்நிலையில் மாகாணசபைத்தேர்தல் முதலில் நடைபெறுமென பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply