வடபகுதியில் கறுவா பயிா்ச்செய்கை குறித்த மற்றொரு செயலமா்வு நாளை (16) மருதனாா் மடம் சந்தியில் உள்ள யாழ்ப்பாணக் கல்லுாரியின் விவசாய நிறுவனத்தில் காலை 10.00 மணி முதல் நண்பகல் 1.00 நடைபெறவுள்ளது.
கடந்த மாதம் வட்டுக்கோட்டையில் நடைபெற்ற செயலமா்வில் பங்குகொண்டு பலன்பெற முடியாதவா்களின் நலன் கருதியும், பலருடைய வேண்டுகோளையடுத்தும் இந்த இரண்டாவது செயலமா்வு மருதனாா் மடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கறுவாகச் செய்கையை வீட்டுத் தோட்டமாக சிறிய அல்லது பெரிய அளவில் செய்வதற்கு ஆா்வமுள்ளவா்கள் இந்த செயலமர்வில் பங்குகொண்டு பயனடைய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடபகுதி மக்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு என்பதால், இந்த சந்தர்ப்பத்தை அவா்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கறுவா பட்டையிலிருந்து பெறுமதி சேர் உற்பத்திகள் பலவற்றையும் மேற்கொள்ள முடியும். அவை தொடா்பாகவும் இங்கு விளக்கமும் பயிற்சியும் வழங்கப்படும்.
பெறுமதி சோ் உற்பத்திகளும் ஏற்றுமதிக்கான வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த உற்பத்திகளையும் செயலமா்வின் போது பாா்வையிட முடியும்.
கறுவா ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர் கலாநிதி யெயசிங்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு வடக்கில் கறுவா செய்கை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் குறித்து விரிவான விளக்க உரை நிகழ்த்தவுள்ளார்.
கறுவா ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளும் கலந்து கொண்டு பொது மக்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கவுள்ளார்கள்.
இலவசமாக நடத்தப்படும் செயலமர்வு குறித்த மேலதிக தகவல்களை (நிகழ்ச்சி இணைப்பாளர் ஐங்கரன்) 077 062 9013 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு பெறமுடியும்.




