கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நுண்ணுயிரியல் பிரிவு இரண்டு மாதங்களாக செயலிழந்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு நுண்ணுயிரியல் பிரிவின் செயற்பாடுகள் செயலிழந்த நிலையில் மாதாந்தம் சுமார் 300 இலட்சம் ரூபா பெறுமதியான பரிசோதனைகள் தனியார் ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் சிறுநீர் பரிசோதனைகள், சளி பற்றிய நுண்ணுயிரியல் பரிசோதனைகள், ஆன்டிபயாடிக் உணர்திறன் சோதனைகள் என பல பரிசோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ரவி குமுதேஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த விடயம் தொடர்பாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்சான் பெல்லனவிடம் கேள்வி எழுப்பபட்டிருந்தது.
எனினும் சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஸ் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் தாம் மறுப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.




