இலங்கையில் இரண்டு சட்டங்கள் உள்ளதாகவும் ஒன்று புத்தரின் சட்டம் என்றும் இரண்டாவது அரச சட்டம் என்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க
தெரிவித்துள்ளார். தமக்கு எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் புத்தரின் போதனைகளின்படியே பணிகளை செய்வதாகவும் விதுர விக்கிரமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.
குறிப்பாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவின் தலைமையின் கீழ் வடக்கு கிழக்கில் காணிகள் அபகரிக்கப்படுவதாகவும் எனவே அவரை ஜனாதிபதி அமைச்சு பதவியில் இருந்து நீக்கவேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.பௌத்தம் மற்றும் சாசனம் எதிர்கொள்ளும் சவால்கள் இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்த சவால் இன்று நேற்றல்ல நீண்ட காலமாக உருவாக்கப்பட்டு வருகிறது. சாத்தியமான எல்லா திசைகளிலிருந்தும் பௌத்த துறவிகள் எம்மை தாக்குகின்றனர்.
இறைவனின் போதனைகளின்படி செயல்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அது கூச்சம் அல்ல, நாம் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும்.நம் நாட்டில் ஒரு சட்டம் இருக்கிறது, அந்தச் சட்டத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்,
புத்தரின் சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் அரச சட்டம் இருக்கிறது. இரண்டையும் நாம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.




