பணத்தகராறு – வர்த்தகர் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல்..! samugammedia

பணத்தகராறு காரணமாக காரில் வந்த சிலர் பாணந்துறை வர்த்தகர் ஒருவரை தாக்கிய நிலையில் குறித்த நபர் வயிற்றில் வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை, வேகட பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய வர்த்தகர் ஒருவரே தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் முன்னாள் பாதாள உலகக் குழுத் தலைவர் ஒருவரின் நெருங்கிய உறவினரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply