தமிழர் பகுதியில் கோயிலுக்கு சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த கதி..! samugammedia

வயோதிப பெண் ஒருவர் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவரது நகை திருடப்பட்ட சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. 

கிளிநொச்சி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு பூஜைகளில் பங்கேற்க சென்ற 70 வயது மூதாட்டியின் கழுத்திலிருந்த தங்க சங்கிலி  திருடப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வயோதிப பெண் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பின் தொடர்ந்து வந்த திருடன் சங்கிலியை அறுத்துச் சென்றதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply