



பருத்தித்துறை மெதடித்த பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் 200 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வின் மூன்றாம் நாளான இன்று பழைய மாணவிகள் மற்றும் கல்லூரி சமூகத்தால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


பருத்தித்துறை மெதடித்த பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் 200 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வின் மூன்றாம் நாளான இன்று பழைய மாணவிகள் மற்றும் கல்லூரி சமூகத்தால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


பாடசாலை அதிபர் திருமதி பாலராணி சிறிதரன் தலைமை இடம் பெற்ற இன்றைய நிகழ்வில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் கல்லூரி வாயலில் இருந்து மலர் மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல விளக்கு ஏற்றப்பட்டு, இறைவணக்கம், ஆசி உரைகள் இடம் பெற்று அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றன.

அரங்கில் வயலின் இசை கச்சேரி வரவேற்ப்ப்பு நடனம் என்பன இடம் பெற்றதை தொடர்ந்து ஆசி உரைகள் இடம் பெற்றன.
அதனை தொடர்ந்து உலகெங்குமிருந்து வருகை தந்திருந்த பழைய மாணவிகள் உள்ளூர் மாணவிகளுடன் இணைந்து இருநூறாவது ஆண்டு நிறைவை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வு, கலை நிகழ்வுகள் என்பன இடம் பெற்றன.
பிரதம விருந்தினராக வட மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் குயினரஸ், பிரதம விருந்தினராக கலந்துநகொண்டார். இதில் மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையின் அனைத்துலக நாடுகளின் கிளை தலைவிகள் மற்றும் உறுப்பினர்கள், கல்லூரி பழைய மாணவிகள், கல்லூரி அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.











